பெருமைகள்

திருக்குறள் பெருமை

ஏறக்குறைய ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் வள்ளுவரை(குறளை)ப் பாராட்டியுள்ளனர்.  அத்தகைய தகுதிக்கு திருக்குறள் உள்ளது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை அல்லவா!


கவிமணி:


      ``வள்ளுவர் தந்த திருமறையைத் - தமிழ்
              மாதின் இனிய உயிர் நிலையை
       உள்ளம் தெளிவுறப் போற்றுவமே - என்றும்
             உத்தம ராகி ஒழுகுவமே’’என்கிறார்.


ஔவையார்:


       ”அணுவை அதன் நடுவே துளை செய்து, ஏழு கடல் நீரையும் உள்ளே பெய்து வைத்தாற் போன்ற திருக்குறள்” என்கிறார்.


திரு.வி.கலியாணசுந்தரனார்:
    
             இது வீட்டு நூல், உலக நூல்,  நாட்டு நூல் என்கிறார்.


இடைக்காடர்:


 கடுகை அதன் நடுவே துளை செய்து, ஏழு கடல் நீரையும் பெய்து வைத்தாற் போன்றது என்கிறார்.


பாரதம் இயற்றிய பெருந்தேவனார்:


பாரதம்,இராமாயணம்,  மனுதர்ம சாஸ்திரம்,  வேதம் ஆகிய இவையே ஒப்பாகும் என்கிறார்.


மனோன் மணீயம் சுந்தரம் பிள்ளை:


     ”வள்ளுவர்செய் திருக்குறளை
            மறுவறநன் குணர்ந்தோர்கள்
     உள்ளுவரோ மனு நீதி
           ஒரு குலத்துக் கொருநீதி” என்கிறார்.






          
            

My site is worth$3,335.28Your website value?