தெளிவுரை



உரையாசிரியர்:  கா.இரி.சதிஷ்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

தெளிவுரை:
   எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை முதன்மையாகக் கொண்டுள்ளன.  அதுபோல இவ்வுலக மக்கள் இறையை முதற் கடவுளாகக் கொண்டுள்ளனர்.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

தெளிவுரை:
     கற்ற கல்வியின் பயன் என்னவெனில் இறைவனடியைத் தொழுதலேயாம்

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்

தெளிவுரை:
     இறைவன் தன்னுடைய பக்தர்களின் மனதில் நீங்காது உள்ளார்.அப்படிப்பட்ட இறையடியச் சேர்ந்தவர்களே இவ்வுலகில் நீடூழி வாழ்வர்.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

தெளிவுரை:
     வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடின்றித் திகழ்பவர் இறைவன்.  அவருடைய அடியைச்சரண் புகுந்தவர்களுக்கு எப்பொழுதும் துன்பம் இல்லை.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
     
இறைவனின் புகழை நினைக்க வேண்டும் அப்பொழுதுதான் இருள் சேர்ந்த இன்ப துன்பங்கள் சேராது. (இருவினை என்றது இன்ப துன்பங்களை)

பொறிவாயில் ஐந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

இறைவன் தன்னுடைய ஐந்து புலன்களையும் ஒரு சேர அடக்கியவர்; அவரைப்போல திகழ்பவர் உலகில் நிலைபெற்று வாழ்வர்.

தனக்கு உவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

தனக்கு நிகராக தானே விளங்கும் இறைவனடியைச் சேர்ந்தவர்கள் மனக்கவலை இன்றி வாழ்வர்.  மற்றவர்,  மனக்கவலையைப் போக்குவது என்பது அரிது. (இங்கு இறைவனடியைச் சேராதாரின் நிலை சொல்லப்பட்டது)

அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீத்தல் அரிது

     அறத்தின் வடிவமாக விளங்கும் இறைவனடியச் சேர்ந்தவர்க்கு உலகவாழ்க்கையை நீந்திக்கடத்தல் என்பது எளிது.  மற்றவர்க்கு அரிது.


கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை


     கேட்கின்ற இயல்பற்ற காது காட்சிக்கு வழிகோலாத கண் முதலிய உறுப்புகள் இருந்தும் பயன் இல்லை;  இறைவனை வணங்காதவர் நிலையும் அத்தகைத்தே. (இறைவனடியைச் சரண்புகுதலை வலியுறுத்துகிறார் வள்ளுவர்)


பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவ னடிசேரா தார்


பிறவி என்கிற மாபெரும் கடலை இறைவனடியைச்சேர்ந்தவர் நீந்திக்கடப்பர்; மற்றையோர் நீந்திக்கடவார். (பெருங்கடல் என்றது வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களையாம்)


வான் சிறப்பு:


  வானத்திலிருந்து பெய்யக்கூடிய மழையால்தான் இவ்வுலகியல் நடந்து வருகிறது.  ஆதலால் அம்மழைதான் இவ்வுலக உயிர்களுக்கு அமுதமாகும்.


மக்களுக்கு நன்மை பயக்கும் உணவையும் அவர்கள் பருகுவதற்கு நீராதாரத்தையும் தருவது மழையேயாம்.




மழையானது பொய்த்துப்போனால் கடல் சூழ்ந்த இவ்வுலகத்தை பசியானது வருத்தும்.


ஏர் தொழில் செய்யும் உழவர் மழை இல்லை என்றால் அத்தொழில் மேற்கொள்ளார்.




மக்களுக்கு வேண்டியவற்றை கொடுப்பதும் மாறாக கொடுக்காமல் அழிப்பதும் மழையேயாகும்.


வானத்திலிரு ந்து வரக்கூடிய மழைத்துளி இல்லை என்றால் பசுமையான புல்கூட முளைப்பது கடினம்.


மேகமானது மழையைத்தராது போனல் நெடுங்கடலும் வற்றிப்போய்விடும்.(தன்னகத்தே உள்ள அனைத்துப் பொருள்களையும் கடல் இழந்துவிடும் என்பதுவுமாம்)


நீரில்லை என்றால் இவ்வுலகியல் அமையாது.  அதுபோல வானம் இல்லைஎனில் மழை பொய்க்கும்.


மழையானது பெய்யா தொழியின் கடவுள் முதலியோர்க்கு செய்யக்கூடிய பூசைகள் கூட நடைபெறாது.


வானம் மழையைத் தராது போய்விடின் தானம், தவம் என்னும் செயல்கள் நடைபெறாது.









Discover 4 Game Pack - 4 Globetrotting Mystery Adventures
The Lost Crown: A Ghosthunting AdventureSentinel: Descendants In TimeDrawn: The Painted TowerMystery 5 PackThe ExperimentAmazing Adventures: Around The WorldPrincess Isabella: A Witch's CurseRhiannon: Curse Of The Four Branches

My site is worth$3,335.28Your website value?