அனைத்தும்

 

திருக்குறள்


கடவுள் வாழ்த்து


1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு

2. கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன்
   நற்றாள் தொழாஅர் எனின்


3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார்.

4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல


5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரி ந்தார் மாட்டு


6. பொறிவாயில் ஐ ந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றாஅர் நீடு வழ்வார்


7. தனக்கு உவமை இல்லாதான் தாள்சேர் ந்தார்க்கு அல்லால்
   மனக்கவலை மாற்றல் அரிது


8. அறவாழி அ ந்தணன் தாள்சேர் ந்தார்க்கு அல்லால்
    பிறவாழி நீந்தல் அரிது


9. கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
    தாளை வணங்காத் தலை


10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார்




வான் சிறப்பு


1. வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
    தானமிழ்தம் என்றுணரற் பாற்று

2. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
    துப்பாய தூஉம் மழை


3. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியன் உலகத்து
    உள் நின்று உடற்றும் பசி

4. ஏரின் உழாஅர் உழவர் புயல் என்னும்
   வாரிவளங் குன்றிக் கால்



5. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
   எடுப்பதூஉம் எல்லாம் மழை


6. விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றுஆங்கே
     பசும்புல் தலைகாண்பு அரிது


7. நெடுங்கடலும் தன்நீர்மைகுன்றும் தடிந்தெழிலிதான்
    நல்காது ஆகி விடின்


8. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
    வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு


9. தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
   வானம் வழங்காது எனின்


10. நீரின்று அமையாது உலகு எனில்யார் யார்க்கும்
    வானின்று அமையாது ஒழுக்கு


நீத்தார் பெருமை


1. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
   வேண்டும் பனுவல் துணிவு

2. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
    இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று


3. இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
    பெருமை பிறங்கிற்று உலகு

4. உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
   வரன்என்னும் வைப்பிற்குஓர் வித்து



5. ஐந்துஅவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான்
   இந்திரனே சாலுங் கரி


6. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
    செயற்குஅரிய செய்கலா தார்


7.சுவைஒளிஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
  வகைதெரிவான் கட்டே உலகு


8. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
   மறைமொழி காட்டி விடும்


9. குணமென்னும் குன்றுஏறி நின்றார் வெகுளி
     கணமேயும் காத்தல் அரிது


10. அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும்
    செந்தண்மை பூண்டொழுக லான்


அறன் வலியுறுத்தல்


1. சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊங்கு
   ஆக்கம் எவனோ உயிர்க்கு

2. அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை அதனின்
    மறத்தலின் ஊங்கில்லை கேடு


3. ஒல்லும்வகையான் அறவினை ஓவாதே
   செல்லும்வாய் எல்லாம் செயல்

4. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
   ஆகுல நீர பிற



5. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
    இழுக்கா இயன்றது அறம்


6. அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க மற்றது
  பொன்றும்கால் பொன்றாத் துணை


7. அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை
    பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை


8. வீழ்நாள் படாமை நன்றுஆற்றின் அஃதுஒருவன்
    வாழ்நாள் வழிஅடைக்கும் கல்


9. அறத்தான் வருவதே இன்பம் மற்றுஎல்லாம்
     புறத்த புகழும் இல


10. செயல்பாலது ஓரும் அறனே ஒருவற்கு
      உயற்பாலது ஓரும் பழி


இல்வாழ்க்கை


1. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
    நலாற்றின் நின்றா துணை

2. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
    இல்வாழ்வான் என்பான் துணை


3. தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தானென்று ஆங்கு
    ஐம்புலத்துஆறு ஓம்பல் தலை

4. பழிஅஞ்சிப் பார்த்துஊண் உடைத்தாயின் இல்வாழ்க்கை
   வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல்



5. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது


6. அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்து ஆற்றின்
    போஒய்ப் பெறுவது எவன்


7. இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
    முயல்வாருள் எல்லாம் தலை


8. ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
   நோற்பாரின் நோன்மை உடைத்து


9. அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃபதும்
    பிறன்பழிப்பது இல்ஆயின் நன்று


10. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறாயும்
     தெய்வத்துள் வைக்கப் படும்


வாழ்க்கைத்துணை நலம்


1. மனைத்தக்க மாண்புடையான் ஆதித்தன் கொண்டான்
    வளத்தக்கான் வாழ்க்கைத் துணை

2. மனைமாட்சி இல்லாள்கண் இல்ஆயின் வாழ்க்கை
    எனைமாட்சித்து ஆயினும் இல்


3. இல்லதுஎன் இல்லவன் மாண்புஆனால் உள்ளதுஎன்
    இல்லவள் மாணாக் கடை

4. பெண்ணின் பெரும்தக்க யாஉள கற்பென்னும்
    திண்மை உண்டாகப் பெறின்


5. தெய்வம் தொழாஅள் கொழு நன் தொழுதுஎழுவான்
   பெயெனப் பெய்யும் மழை


6. தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்றா
    சொல்காத்துச் சோர்வுஇலாள் பெண்


7. சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்
    நிறைகாக்கும் காப்பே தலை


8. பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெரும்சிறாப்புப்
    புத்தேளிர் வாழும் உலகு


9. புகழ்புரி ந்த இலிலோர்க்கு இல்லை இகழ்வார் முன்
   ஏறுபோல் பீடு நடை


10. மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
     நன்கலம் நன்மக்கள் பேறு


மக்கள் பேறு


1. பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவுஅறிந்த
    மக்கள்பேறு அல்ல பிற

2. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
    பண்புடை மக்கள் பெறின்

3. தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
    தம்தம் வினயான் வரும்

4. அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
    சிறுகை அளாவிய கூழ்


5. மக்கள்தம் தீண்டல் உடற்குஇன்பம் மற்றுஅவர்
  சொல்கேட்டல் இன்பம் செவிக்கு


6. குழல் இனிது யாழினிது என்பதம் மக்கள்
   மழலைச்சொல் கேளா தவர்


7. தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
   முந்தி இருப்பச் செயல்


8. தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மா`நிலத்து
   மனுயிர்க் கெல்லாம் இனிது


9. ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச்
    சான்றோன் எனக்கேட்ட தாய்


10. மகந்த ந்தைக்கு ஆற்றும் உதவி இவந்த ந்தை
     என்நோற்றான் கொலெனும் சொல்


அன்புடைமை


1. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
     புன்கண்ணீர் பூசல் தரும்

2. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
     என்பும் உரியர் பிறர்க்கு



3. அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆருயிர்க்கு
    என்போடு இயைந்த தொடர்பு

4. அன்புஈனும் ஆர்வமும் உடைமை அதுஈனும்
     நண்புஎன்னும் நாடாச் சிறப்பு


5. அன்புற்று அமர் ந்த வழக்குஎன்ப வையகத்து
    இன்புற்றார் எய்தும் சிறப்பு


6. அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
    மறத்திற்கு அஃதேதுணை


7. என்பிலதனை வெயில்போலக் காயுமே
   அன்பு இலதனை அறம்


8. அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
   வற்றல் மரம்தளிர்த்து அற்று


9. புறத்து உறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பில் அவர்க்கு


10. அன்பின் வழியது உயிர் நிலை அஃப்துஇலார்க்கு
     என்புதோல் போர்த்த உடம்பு


விருந்து ஓம்பல்


1. இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்துஓம்பி
    வேளாண்மை செய்தல் பொருட்டு

2. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
    மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று

3. வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
    பருவந்து பாழ்படுதல் இன்று

4. அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
    நல்விருந்து ஓம்புவான் இல்

5. வித்தும் இடல்வேண்டும் கொல்லோம் விரு ந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்


6. செல்விரு ந்து ஓம்பி வருவிரு ந்து பார்த்திருப்பான்
நல்விரு ந்து வானத் தவர்க்கு


7. இனைத்துணைத்து என்பதுஒன்று இல்லை விருந்தின்
   துணைத்துணை வேள்விப் பயன்


8. பரிந்துஓம்பிபற்றுஅற்றேம் என்பர் விருந்துஓம்பி
   வேள்வி தலைப்படா தார்


9. உடைமையுள் இன்மை விரு ந்தோம்பல் ஓம்பா
    மடமை மடவார்கண் உண்டு


10. மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரி ந்து
      நோக்கக் குழையும் விருந்து


இனியவை கூறல்


1. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
    செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்

2. அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
    இன்சொலன் ஆகப் பெறின்


3. முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்
    இன்சொ லினதே அறம்

4. துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் 
    இன்புறூஉம் இன்சொல் அவர்க்கு



5. பணிஉடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணிஅல்ல மற்றுப் பிற


6. அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
    நாடி இனிய சொலின்


7. நயனீன்று நன்றி பயக்க்ய்ம் பயனீன்று
    பண்பில் தலைப்பிரியாச் சொல்


8. சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
    இம்மையும் இன்பம் தரும்


9. இன்சொல் இனிதுஈன்றல் காண்பானெவன்கொலோ
    வன்சொல் வழங்கு வது


10. இனிய உளஆக இன்னாத கூறால்
      கனிருப்பக் காய்கவர்ந்து அற்று (100)


செய்ந்நன்றி அறிதல்


1. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
    வானகமும் ஆற்றல் அரிது

2. காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
   ஞாலத்தின் மாணப் பெரிது


3. பயந்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
    நன்மை கடலின் பெரிது

4. தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
   கொள்வர் பயன்தெரி வார்



5. உதவி வரைத்துஅன்று உதவி உஇதவி
    செயப்பட்டார் சால்பின் வரைத்து


6. மறாவற்க மாசற்றார் கேண்மை துறாவற்க
   துன்பத்துள் துப்புஆயர் நட்பு


7. எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு


8. நன்றி மறப்பது நன்றுஅன்று நன்றுஅல்லது
அன்றே மறப்பது நன்று


9. கொன்றுஅன்ன இன்னா செயினும் அவர்செய்த
    ஒன்று நன்று உள்ளக் கெடும்


10. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வு இல்லை
     செய்ந்நன்றி கொன்ற மகற்கு


நடுவு நிலைமை


1. தகுதி என ஒன்று நன்றே பகுதியால்
    பாற்பட்டு ஒழுகப் பெறின்

2. செப்பம் உடையவர் ஆக்கம் சிதைவுஇன்றி
    எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து


3.  நன்றே தரினும் நடுவிக ந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்

4. தக்கார் தகவுஇலர் என்பது அவரவர்
   எச்சத்தால் காணப்படும்



5. கேடும் பெருக்கமும் இலல்ல நெஞ்சத்துக்
   கோடாமை சான்றோர்க்கு அணி


6. கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
   நடுஒரீஇ அல்ல செயின்


7. கெடுவாக வையாது உலகம் நடுவாக
    நன்றிக்கண் தங்கியான் தாழ்வு


8. சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து ஒருபால்
   கோடாமை சான்றோர்க்கு அணி


9. சொல்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
    உள்கோட்டம் இன்மை பெறின்


10. வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
     பிறவும் தம்போல் செயின்


அடக்கம் உடைமை


1. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
    ஆரிருள் உய்த்து விடும்

2. காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
   அதனின் ஊங்கு இல்லை உயிர்க்கு

3. செறிவுஅறிந்து சீர்மை பயக்கும் அறிவுஅறிந்து
    ஆற்றின் அடங்கப் பெறின்

4. நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
   மலையினும் மாணப் பெரிது

5. எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து


6. ஒருமையுள் ஆமைபோல் ஐந்துஅடக்கல் ஆற்றின்
   எழுமையும் ஏமாப்பு உடைத்து


7. யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
   சோகாப்பர் சொலிழுக்குப் பட்டு


8. ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
    நன்றுஆகாது ஆகி விடும்


9. தீயினால் சுட்டபுண் உளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு


10. கதம்காத்துக் கற்றுஅடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறாம்பார்க்கும் ஆற்றின் நிழை ந்து


ஒழுக்கம் உடைமை


1. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
    உயிரினும் ஓம்பப் படும்

2. பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித்
    தேரினும் அஃதே துணை


3. ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
   இழிந்த பிறப்பாய் விடும்

4. மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
    பிறப்புஒழுக்கம் குன்றக் கெடும்



5. அழுக்காறு உடையான்கண்  ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு


6. ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறி ந்து


7.ஒழுக்கத்தினெய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி


8. நன்றிக்கு வித்துஆகும் நல்லொழுக்கம் தீஒழுக்கம்
என்றும் இடும்பை தரும்


9. ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல்


10. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்


பிறனில் விழையாமை


1. பிறன்பொருளான் பெட்டுஒழுகும் பேதைமை ஞாலத்து
   அறம்பொருள் கண்டார்கண் இல்

2. அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
    நின்றாரின் பேதையார் இல்


3. விளிந்தாரின் வேறுஅல்லர் மன்ற தெளிந்தாரில்
    தீமை புரிந்து ஒழுகுவார்  

4. எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
    தேரான் பிறனில் புகல்


5. எளிதுஎன இலிறப்பான் எய்தும் எஞ்ஞான்றும்
விளியாது நிற்கும் பழி


6. பகைபாவம் அச்சம் பழிஎன நான்கும்
இகவாஆம் இலிறப்பான் கண்


7. அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலான்
பெண்மை நயவா தவன்


8. பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனோன்றோ ஆன்ற ஒழுக்கு


9. நலக்குஉரியர் யாரெனின் நாமநீர் வைப்பில்
பிறற்குஉரியாள் தோள்தோயா தார்


10. அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையான்
பெண்மை நயவாமை நன்று


பொறை உடைமை


1. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
    இகழ்வார்ப் பொறுத்தல் தலை

2. பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
    மறத்தல் அதனினும் நன்று


3. இன்மையுள் இன்மை விருந்துஓரால் வன்மையுள்
   வன்மை மடவார்ப் பொறை

4. நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
   போற்றி ஒழுகப் படும்


5. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
    பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து


6. ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்குப்
    பொன்றும் துணையும் புகழ்


7. திறனல்ல தற்பிறார் செய்யினும் நோநொந்து
    அறனல்ல செய்யாமை நன்று


8. மிகுதியால் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
    தகுதியால் வென்று விடல்


9. துறாந்தாரின் தூய்மை உடையர் இற ந்தார்வாய்
   இன்னாச்சொல் நோற்கிற் பவர்


10. உண்ணாது நோற்பார் பெரியர் பிறார்சொல்லும்
     இன்னாச்சொல் நோற்பாரின் பின்


அழுக்காறாமை


1. ஒழுக்குஆறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
   அழுக்காறு இலாத இயல்பு

2. விழுப்பேற்றின் அஃதுஒப்பது இல்லை யார்மாட்டும்
    அழுக்காற்றின் அன்மை பெறின்


3. அறனாக்கம் வேண்டாதான் என்பானாக்கம்
    பேணாது அழுக்கறுப் பான்

4. அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
    ஏதம் படுபாக்கு அறிந்து

5. அழுக்காறு உடையாருக்கு அதுசாலும் ஒன்னார்
    வழுக்கியும் கேடுஈன் பது


6. கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
    உண்பதூஉம் இன்றிக் கெடும்


7. அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
    தவ்வையைக் காட்டி விடும்


8. அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
   தீஉழி உய்த்து விடும்


9.அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
  கேடும் நினைக்கப் படும்


10. அழுக்காறு அகன்றாஅரும் இல்லை அஃதுஇலார்
     பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்































My site is worth$3,335.28Your website value?