அறத்துப்பால்1,2வரிசை







Free Code Script

இரண்டு இரண்டு குறள்கள் ஒவ்வொரு அதிகாரத்திலும் இணைக்கப்பட்டுள்ளது

(அறத்துப்பால்=கடவுள் வாழ்த்து முதல் ஊழ் முடிய)


கடவுள் வாழ்த்து


1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு


2. கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன்
   நற்றாள் தொழாஅர் எனின்


வான் சிறப்பு


1. வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
    தானமிழ்தம் என்றுணரற் பாற்று


2. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
    துப்பாய தூஉம் மழை


 நீத்தார் பெருமை

1. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
   வேண்டும் பனுவல் துணிவு


2. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
    இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று


அறன் வலியுறுத்தல்


1. சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊங்கு
   ஆக்கம் எவனோ உயிர்க்கு


2. அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை அதனின்
மறத்தலின் ஊங்கில்லை கேடு


இல்வாழ்க்கை


1. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
 நலாற்றின் நின்றா துணை


2. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
    இல்வாழ்வான் என்பான் துணை


வாழ்க்கைத்துணை நலம்


1. மனைத்தக்க மாண்புடையான் ஆதித்தன் கொண்டான்
    வளத்தக்கான் வாழ்க்கைத் துணை


2. மனைமாட்சி இல்லாள்கண் இல்ஆயின் வாழ்க்கை
    எனைமாட்சித்து ஆயினும் இல்


மக்கட்பேறு


1. பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவுஅறிந்த
    மக்கள்பேறு அல்ல பிற


2. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
    பண்புடை மக்கள் பெறின்


அன்புடைமை


1. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
     புன்கண்ணீர் பூசல் தரும்


2. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
     என்பும் உரியர் பிறர்க்கு


விருந்து ஓம்பல்


1. இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்துஓம்பி
    வேளாண்மை செய்தல் பொருட்டு


2. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
    மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று


இனியவை கூறல்


1. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
    செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்


2. அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
    இன்சொலன் ஆகப் பெறின்


செய்ந்நன்றி அறிதல்


1. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
    வானகமும் ஆற்றல் அரிது


2. காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
   ஞாலத்தின் மாணப் பெரிது


 நடுவு நிலைமை


1. தகுதி என ஒன்று நன்றே பகுதியால்
    பாற்பட்டு ஒழுகப் பெறின்


2. செப்பம் உடையவர் ஆக்கம் சிதைவுஇன்றி
    எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து


அடக்கம் உடைமை


1. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
    ஆரிருள் உய்த்து விடும்


2. காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
   அதனின் ஊங்கு இல்லை உயிர்க்கு


ஒழுக்கம் உடைமை


1. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
    உயிரினும் ஓம்பப் படும்


2. பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித்
    தேரினும் அஃதே துணை


பிறனில் விழையாமை


1. பிறன்பொருளான் பெட்டுஒழுகும் பேதைமை ஞாலத்து
   அறம்பொருள் கண்டார்கண் இல்


2. அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
    நின்றாரின் பேதையார் இல்


பொறை உடைமை


1. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
    இகழ்வார்ப் பொறுத்தல் தலை


2. பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
    மறத்தல் அதனினும் நன்று


அழுக்காறாமை


1. ஒழுக்குஆறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
   அழுக்காறு இலாத இயல்பு


2. விழுப்பேற்றின் அஃதுஒப்பது இல்லை யார்மாட்டும்
    அழுக்காற்றின் அன்மை பெறின்


புறங்கூறல்


1. அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன்
     புறம்கூறான் என்றல் இனிது


2. அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
    புறனழீஇப் பொய்த்து நகை


பயனில் சொல்லாமை


1. பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
    எல்லாரும் எள்ளப் படும்


2. பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
 நட்டார்கண் செய்தலின் தீது


தீவினை அச்சம்


1. தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
   தீவினை என்னும் செருக்கு


2. தீயவை தீய பயத்தலால் தீயவை
   தீயினும் அஞ்சப் படும்


ஒப்புரவு அறிதல்


1. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
    எனாற்றும் கொல்லோ உலகு


2. தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு 
   வேளாண்மை செய்தற் பொருட்டு


ஈகை


1. வறியவர்க்குஒன்று ஈவதேஈகை மற்றெல்லாம்
    குறிஎதிர்ப்பை நீரது உடைத்து


2. நலாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
    இலெனினும் ஈதலே நன்று


அருளுடைமை

1. அருள்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருள்செல்வம்
    பூரியார் கண்ணும் உள


2. நலாற்றால் நாடி அருளாள்க பல்லாற்றால்
   தேரினும் அஃதே துணை


புலால் மறுத்தல்

1. தனூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்டான்
   எங்ஙனம் ஆளும் அருள்


2. பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
   ஆங்கில்லை ஊதின் பவர்க்கு

தவம்

1. உற்றா நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு


2. தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவமதனை
அஃதுஇலார் மேற்கொள் வது


கூடா ஒழுக்கம்

1. வஞ்ச மனத்தான் படிற்றுஒழுக்கம் பூதங்கள்
    ஐந்தும் அகத்தே நகும்


2. வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம்
     தானறி குற்றப் படின்

கள்ளாமை

1. எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
    கள்ளாமை காக்கதன் நெஞ்சு


2. உள்ளத்தால் உள்ளுதலும் தீதே பிறர்பொருளைக்
    கள்ளத்தால் கள்வேம் எனல்


வாய்மை

1. வாய்மை எனப்படுவது யாதுஎனின் யாதொன்றும்
    தீமை இலாத சொலல்


2. பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
     நன்மை பயக்கும் எனின்

வெகுளாமை

1. செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்லிடத்துக்
    காக்கினென் காவாக்கால் என்


2. செல்லா இடத்துச் சினம்தீது செல்இடத்தும்
   இல்அதனின் தீய பிற

இன்னா செய்யாமை

1. சிறப்பீனும் செல்வம் பெரினும் பிறர்க்குஇன்னா
    செய்யாமை மாசற்றார் கோள்


2. கறுத்துஇன்னா செய்தஅக் கண்ணும் மறுத்துஇன்னா
   செய்யாமை மாசற்றார் கோள்


கொல்லாமை

1. அறவினை யாதுஎனின் கொல்லாமை கோறால்;
    பிறவினை எல்லாம் தரும்


2. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
   தொகுத்தவற்றுள் எல்லம் தலை


 நிலையாமை

1. நில்லா தவற்றை நிலையின என்றுணரும்
   புல்லறி வாண்மை கடை


2. கூத்தாடு அவைக்குழாத்து அற்றே பெரும்செல்வம்
   போக்குக் அதுவிளிந்து அற்று


துறவு

1. யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
   அதனின் அதனின் இலன்


2. வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின்
    ஈண்டுஇயற் பால் பல


மெய் உணர்தல்

1. பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
    மருளானாம் மாணாப் பிறப்பு


2. இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
    மாசறு காட்சி யவர்க்கு


அவா அறுத்தல்

1. அவாஎன்ப எல்ல உயிர்க்கும் எஞ்ஞான்றும்
    தவாஅப் பிறப்புஈனும் வித்து


2. வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
    வேண்டாமை வேண்ட வரும்


ஊழ்

1. ஆகுஊழால் தோன்றும் அசைவுஇன்மை கைப்பொருள்
    போகுஊழால் தோன்றும் மடி


2. பேதைப் படுக்கும் இழவுஊழ் அறிவுஅகற்றும்
    ஆகலூழ் உற்றக் கடை                                                        - திருவள்ளுவர்



பிற தளங்களிலிருந்து cut copy paste செய்யப்படாதது
(please avoid cut copy paste)






























My site is worth$3,335.28Your website value?