இன்பத்துப் பால் என்றும் காமத்துப் பால் என்றும் அழைக்கப்படும் இப்பகுதி களவியல் கற்பியல் என்ற பாகுபாட்டிற்கு உடையது. முதலில் யாம் களவியல் குறித்த குறட்பாக்களைக் காணலாம்.
களவியல் குறித்த அதிகாரங்கள்:
1. தகையணங்குறுத்தல்:
1. அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு
2. நோக்கினாள் நோக்குஎதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்னது உடைத்து
3. பண்டுஅறியேன் கூற்றுஎன் பதனை இனிஅறிந்தேன்
பெண்தகையால் பேரமர்க் கட்டு
4. கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்தகைப்
பேதைக்கு அமர்த்தன கண்
5. கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து
6. கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்
7. கடாஅக் களிற்றின்மேல் கண்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்
8. ஒண்ணுதற்கு ஓஒ உடை ந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு
9. பிணைஏர் மட நோக்குகம் நாணும் உடையாட்கு
அணிஎவனோ ஏதில தந்து
10. உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று
2. குறிப்பறிதல்
1. இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கு ஒன்றுஅந்நோய் மருந்து
2. கண்களவு கொள்ளும் சிறு நோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது
3. நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதுஅவள்
யாப்பினுள் அட்டிய நீர்
4. யான் நோக் குங்காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகும்
5. குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்
6. உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்
7. செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு
8. அசையியற்கு உண்டுஆண்டு ஓரேஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்
9. ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள
10. கண்ணொடு கண்இணை நோக்குஒக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல
3. புணர்ச்சி மகிழ்தல்
1. கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள
2. பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து
3. தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு
4. நீங்கின் தெறூஉம் குறுங்கால் தண்என்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்
5. வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்
6. உறுதோறு உயிர்தளிர்ப்பத்ட தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்
7. தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு
8. வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு
9. ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்
10. அறிதோறும் அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு
4. நலம் புனைந்துரைத்தல்
1. நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்
2. மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூஒக்கும் என்று
3. முறிமேனி முத்தம் முறுவல் வெறி நாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு
4. காணின் குவளை கவிழ்ந்து நிலன் நோக்கும்
மாணிழை கண்ஒவ்வேம் என்று
5. அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை
6. மதியும் மடந்தை முகனும் அறியா
பதியிற் கலங்கிய மீன்
7. அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறஉண்டோ மாதர் முகத்து.
8. மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி
9. மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி
10. அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்
5. காதற் சிறப்புரைத்தல்
1. பாலொடு தேன்கலந்த அற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்
2. உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு
3. கருமணியிற் பாவாய்நீ போதாய்யாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்
4. வாழ்தல் உயிர்க்குஅன்னள் ஆயிழை சாதல்
அதற்குஅன்னள் நீங்கும் இடத்து
5. உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்புஅறியேன்
ஒள்அமர்க் கண்ணாள் குணம்
6. கணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
நுண்ணியரெம் காத லவர்
7. கண்ணுள்ளார் காதல வராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறி ந்து
8. நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து
9. இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னுமிவ் வூர்
10. உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும்இவ் வூர்
please avoid cut copy paste. your IP address may be trace out.
பிற தளங்களிலிருந்து cut copy paste செய்யப்படாதது
(வரும்.....)