அறத்துப்பால் 3,4 வரிசை

கடவுள் வாழ்த்து

3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார்.

4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல


வான் சிறப்பு

3. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியன் உலகத்து
    உள் நின்று உடற்றும் பசி

4. ஏரின் உழாஅர் உழவர் புயல் என்னும்
   வாரிவளங் குன்றிக் கால்


நீத்தார் பெருமை

3. இருமை வகைதெரி ந்து ஈண்டுஅறம் பூண்டார்
    பெருமை பிறங்கிற்று உலகு

4. உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
   வரன்என்னும் வைப்பிற்குஓர் வித்து


அறன்வலியுறுத்தல்

3. ஒல்லும்வகையான் அறவினை ஓவாதே
   செல்லும்வாய் எல்லாம் செயல்

4. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
   ஆகுல நீர பிற


இல்வாழ்க்கை

3. தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தானென்று ஆங்கு
    ஐம்புலத்துஆறு ஓம்பல் தலை

4. பழிஅஞ்சிப் பார்த்துஊண் உடைத்தாயின் இல்வாழ்க்கை
   வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல்



வாழ்க்கைத்துணை நலம்

3. இல்லதுஎன் இல்லவன் மாண்புஆனால் உள்ளதுஎன்
    இல்லவள் மாணாக் கடை

4. பெண்ணின் பெரும்தக்க யாஉள கற்பென்னும்
    திண்மை உண்டாகப் பெறின்


மக்கள் பேறு

3. தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
    தம்தம் வினயான் வரும்

4. அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
    சிறுகை அளாவிய கூழ்


அன்புடைமை

3. அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆருயிர்க்கு
    என்போடு இயைந்த தொடர்பு

4. அன்புஈனும் ஆர்வமும் உடைமை அதுஈனும்
     நண்புஎன்னும் நாடாச் சிறப்பு


விருந்து ஓம்பல்

3. வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
    பருவந்து பாழ்படுதல் இன்று

4. அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
    நல்விருந்து ஓம்புவான் இல்


இனியவை கூறல்

3. முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்
    இன்சொ லினதே அறம்

4. துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் 
    இன்புறூஉம் இன்சொல் அவர்க்கு



செய்ந்நன்றி அறிதல்

3. பயந்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
    நன்மை கடலின் பெரிது

4. தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
   கொள்வர் பயன்தெரி வார்


நடுவு நிலைமை

3.  நன்றே தரினும் நடுவிக ந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்

4. தக்கார் தகவுஇலர் என்பது அவரவர்
   எச்சத்தால் காணப்படும்


அடக்கம் உடைமை

3. செறிவுஅறிந்து சீர்மை பயக்கும் அறிவுஅறிந்து
    ஆற்றின் அடங்கப் பெறின்

4. நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
   மலையினும் மாணப் பெரிது


ஒழுக்கம் உடைமை

3. ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
   இழிந்த பிறப்பாய் விடும்

4. மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
    பிறப்புஒழுக்கம் குன்றக் கெடும்


பிறனில் விழையாமை

3. விளிந்தாரின் வேறுஅல்லர் மன்ற தெளிந்தாரில்
    தீமை புரிந்து ஒழுகுவார்  

4. எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
    தேரான் பிறனில் புகல்


பொறை உடைமை

3. இன்மையுள் இன்மை விருந்துஓரால் வன்மையுள்
   வன்மை மடவார்ப் பொறை

4. நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
   போற்றி ஒழுகப் படும்


அழுக்காறாமை

3. அறனாக்கம் வேண்டாதான் என்பானாக்கம்
    பேணாது அழுக்காறுப் பான்

4. அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
     ஏதம் படுபாக்கு அறிந்து







My site is worth$3,335.28Your website value?